Published : 31 Mar 2016 09:43 AM
Last Updated : 31 Mar 2016 09:43 AM

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு: முகேஷ் அம்பானி தகவல்

முகேஷ் அம்பானி தலைமை யிலான ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத் தொடர்பு சேவை நிறுவ னமான ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,50,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த `ஃபிக்கி பிரேம்ஸ்' மாநாட்டில் முகேஷ் அம்பானி இதை குறிப்பிட்டுள்ளார்.

இந்த முதலீட்டின் மூலம் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ப்அப் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும். தொலைத் தொடர்பு சேவை அளிப்பதில் மிகப் பெரிய மாற்றத்தை இது உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

சுற்றுச் சூழலை காக்கக்கூடிய டிஜிட்டல் முயற்சிகளில், இந்த 1.5 லட்சம் கோடி முதலீடு மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். வணிக ரீதியாக இதை அறிமுகப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

ரிலையன்ஸ் ஜியோ வணிக ரீதியான சேவை தொடங்குகிற முதல் நாளிலிருந்தே இந்தியாவில் 70 சதவீத இடங்களுக்கு சேவையை வழங்கும். ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவை தற்போது இதர நிறுவனங்கள் வழங்கும் சராசரி வேகத்தைவிட சுமார் 40 முதல் 80 மடங்கு அதிகமான வேகத்தில் இருக்கும். நுகர்வோருக்கு மிக மலிவான விலையில் ஆர்ஜியோ சேவையை வழங்கும். நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மலிவான விலையில் எளிதாக கிடைக்கச் செய்வோம். தற்போது இந்தியாவில் ஒரு பயனாளி மாதத்துக்கு சராசரியாக 0.15 ஜிபி டேட்டாதான் பயன்படுத்துகிறார் என்றால் ஆர் ஜியோ மாதத்துக்கு 10 ஜிபி டேட்டா வழங்கும் நெட்வொர்க்காக இருக்கும். இந்த நூற்றாண்டை டிஜிட்டல் வளர்ச்சிகள்தான் வரையறுக்கும் என்பதுதான் ஆர்ஜியோ உருவாகக் காரணம் என்று குறிப்பிட்டார். மேலும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்துவதில் இந்தியா தற்போது உலக அளவில் 150 வது இடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்துக்கு பிறகு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்துவதில் முதல் 10 இடங்களுக்கு வரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் குழுமம் மலிவான விலையில் 4 ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வணிக ரீதியாக சேவையை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக இந்த நிறுவனம் 2300 MHZ அகண்ட அலைவரிசையை 2010ல் கையகப்படுத்தியது. மேலும் உத்தி ரீதியாக தனது சகோதரர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆர் காம் நிறுவனத்துடன் 850 MHZ அலைவரிசையை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதும் முக்கியமானது.

இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் ஆர் ஜியோ ஏப்ரல் மாதத்தில் வணிக ரீதியான சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், இந்த ஆண்டு டிசம்பருக்குள் வணிக ரீதியாக முழுமையாக ஆர் ஜியோ அறிமுகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் குழமத்தின் 1,20,000 லட்சம் ஊழியர்கள்களுக்கு ஆர் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x