டிஜிட்டல் யுகத்தை ஈர்க்கும் கிரிப்டோகரன்சி; வருகிறது புதிய சட்டம்: முக்கிய தகவல்கள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சமீபகாலமாக டிஜிட்டல் யுகத்தினரிடம் அதிகம் புழங்கும் சொல்லாக கிரிப்டோகரன்சி இருக்கிறது. தற்போது அடிக்கடி செய்திகளிலும் அடிபட்டு சாமான்ய மக்களையும் சென்றடைய ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. விரைவில் தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை அறிவிக்கவும், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதுதொடர்பாக எடுக்கப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

* இந்தியாவில் 1.5 கோடி முதல் 2.0 கோடி கிரிப்டோ முதலீட்டாளர்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

* மொத்த கிரிப்டோகரன்சி முதலீடு என்பது சுமார் ரூ. 40,000 கோடி என தெரிகிறது.

* உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின், 60,000 டாலராக உள்ளது.

* இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் விலை இருமடங்காக அதிகரித்து, இந்தியாவிலும் உள்ளூர் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.

* சமீபகாலமாக, கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதில் எளிதான மற்றும் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறன.

* இது முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் புகார்கள் இருந்தன

* ரிசர்வ் வங்கி தனியார் கிரிப்டோகரன்சிகள் குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளது.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது.

* பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்யும் எனத் தெரிகிறது.

* கிரிப்டோகரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

* இந்த மாற்றங்கள் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட பின்பு பங்குச்சந்தை போலவே கிரிப்டோ சந்தையும் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அதேசமயம் இதற்கு மாற்றாக புதிய கிரிப்ட்டோகரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in