

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) டிஜிட்டல் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் இன்று ஆறு சதவீதம் உயர்ந்து ரூ.1,435 ஆக இருந்தது.
டிஜிட்டல் நிதி சேவையில் முன்னணி நிறுவனமாக பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பங்கு வெளியிட்டது.
பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ம் தேதி அன்று முடிவடைந்தது. பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டபோது பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது.
மும்பை பங்குச்சந்தையில் 1955 ரூபாயாக தொடங்கியது. இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07 சதவீதம் அளவில் சரிவு காணப்பட்டது. பின்னர் மேலும் சரிந்து 1806.65 ரூபாயாக காணப்பட்டது.
இதேபோன்று தேசிய பங்குசந்தையில் இந்த பங்குகள் நிர்ணயவிலையை விடவும் 15.97 சதவீதம் சரிவினைக் கண்டது.
பேடிஎம் இன்று தனது முதல் வர்த்தக நாளிலேயே தனது மதிப்பில் 27 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்தது. இதனால் பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா பங்குகள் அதிரடியாக சரிவு கண்டதால் கண்ணீர் விட்டார்.
இந்தநிலையில் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) டிஜிட்டல் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட ஆறு சதவீதம் உயர்ந்து ரூ.1,435 ஆக இருந்தது.
திங்களன்று முந்தைய அமர்வில் இது ₹1,360.30 ஆக இருந்தது - அதன் மதிப்பானரூ.2,150 இல் இருந்து 35 சதவீதம் குறைந்து.
கரோனா வைரஸ் நோய் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்குப் பிறகு பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்த அதே நாளில் பேடிஎம் பங்குகளின் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இரண்டு நாட்களாக சரிவு கண்ட நிலையில் இன்று 6 சதவீத உயர்வு பேடிஎம் நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவனம் இரண்டு மடங்குக்கும் மேலாக மொத்த வணிகப் பொருட்களின் மதிப்பு ₹1,95,600 கோடியாக உயர்ந்துள்ளது என்று பிஎஸ்இ-யில் தாக்கல் செய்யப்பட்ட அக்டோபர் மாதத்திற்கான நிறுவனத்தின் முதல் செயல்திறன் அறிக்கை தெரிவிக்கிறது.