மியூச்சுவல் பண்டில் 39 லட்சம் புதிய கணக்குகள்

மியூச்சுவல் பண்டில் 39 லட்சம் புதிய கணக்குகள்
Updated on
1 min read

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மியூச்சுவல் பண்டில் 39 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. மியூச்சுவல் பண்ட் பற்றிய விழிப்புணர்வு சிறு நகரங் களில் அதிகமாக இருப்பதால் புதிய முதலீட்டாளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2014-15-ம் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 25 புதிய கணக்குகள் மட்டுமே இருந்தன. நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி இறுதிவரை 39 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 2009 மார்ச் முதல் மியூச்சுவல் பண்டில் இருந்து வெளியேறுவது அதிக மாக இருந்தது 2008-ம் ஆண்டு பொருளாதார மந்த நிலைக்கு பிறகு 1.5 கோடி கணக்குகள் மூடப் பட்டன. 2014-15-ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர் களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ரூ. 16,480 கோடி அந்நிய முதலீடு

கடந்த நான்கு மாதங்களாக இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறி வரும் சூழலில், மார்ச் மாதத்தில் இதுவரை ரூ. 16,480 கோடி முதலீடு வந்துள்ளது. மார்ச் 1 முதல் 23-ம் தேதி வரை இந்திய பங்குச் சந்தைக்கு அந்நிய நிகர முதலீடு 15,660 கோடி ரூபாயாகவும், இந்திய கடன் சந்தைக்கு 816 கோடி ரூபாயும் வந்துள்ளது. மொத்தம் ரூ. 16,480 கோடி முதலீடு வந்துள்ளது.

கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை ரூ. 41,661 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி உள்ளது.

பணவீக்கம் குறைவாக உள்ள இந்த சூழலில், வரும் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய கடன் மற்றும் நிதிக்கொள்கையை வெளியிட இருக்கிறது. அப்போது வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதால் அந்நிய முதலீடு வரத்து தொடர்ந்து இருக்கும் என்றே பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in