விரைவில் பிஎஸ்இ ஐபிஓ: ரூ.800 கோடி திரட்ட திட்டம்

விரைவில் பிஎஸ்இ ஐபிஓ: ரூ.800 கோடி திரட்ட திட்டம்
Updated on
1 min read

முன்னணி பங்குச்சந்தையான பிஎஸ்இ அடுத்த நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் 800 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் `செபி’-யிடம் பிஎஸ்இ விண்ணப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முன்னணி மெர்ச்சன்ட் வங்கியான எடில்வைஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் 9 முதல் 12 மாதங்களில் முடிவடையும் என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் எம்.சி.எக்ஸ் மட்டுமே பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in