

கடந்த மூன்று வருடங்களாக பயிற்சி அளித்து கொண்டிருக்கிற 157க்கும் மேற்பட்டவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு மையத் தின் (என்எஸ்டிசி) மூலம் 500 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப் பட்டுள்ளது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
2013-14-ம் ஆண்டில் 237.76 கோடி ரூபாயும், 2014-15-ம் ஆண்டில் 135.78 கோடி ரூபாயும் 2015-16-ம் ஆண்டில் 122.57 கோடி ரூபாயும் வழங்கியுள்ளதாக மத்திய தொழில் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: தேசிய திறன் மேம்பாட்டு மையம் ஆராய்ச்சியை மையப்படுத்தி திறனை மேம்படுத்துகிறது. இதை பல மாவட்டங்களில் பல துறை வாரியாக நடத்தி வருகிறது. என்எஸ்டிசி அறிக்கை யின்படி புதிதாக வேலையில் இணையும் 12 கோடி மக்களுக்கு இந்த துறை குறித்த திறன் தேவைப் படுகிறது. மேலும் இந்த அறிக் கையின் படி 2020-க்குள் வேலை வாய்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு உண்டான திறன் தேவை குறித்தும் தேசிய திறன் மேம்பாட்டு மையம் ஆய்வு செய்து வருகிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முறையே 100 சதவீதம் மற்றும் 22 சதவீதம் வேலை வாய்ப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
24 துறைகளில் மனித வளம் மற் றும் திறன் தேவை குறித்த ஆய் வில் என்எஸ்டிசியின் அறிக்கையின் படி இந்தியாவில் 46 கோடி பேர் வேலை சார்ந்த திறனை பெற்றுள் ளனர். இது 2022-ல் 58 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவையில் 2 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்கள்
2.37 லட்சத்திற்கும் மேலான காப்புரிமை விண்ணப்பங்கள் அரசாங்கத் திடம் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு பிப்ரவரி 1 வரை காப்புரிமை விண்ணப்பங்கள் மற்றும் முத்திரை பதிவு கோரிக்கை ஆகியவை முறையே 2,37,029 மற்றும் 5,44,171 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று மாநிலங் களைவையில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு காரணம் ஆட்கள் பற்றாக்குறைதான் என்று கூறினார். 458 காப்புரிமை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்புவதற் கான தேர்வு முடிக்கப்பட்டுவிட்டன. 263 ஒப்பந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முத்திரை பதிவுக்கும் 108 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.