

பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டங்களில் சிறு குறு நிறுவனங்கள் ஈடுபட புதிய கொள்கை உதவி செய்கிறது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு துறையில் புதிய கொள்முதல் நடைமுறைகள் சிறு குறு நிறுவனங்களும் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தித் திட்டங்களில் பங்களிப்பு செய்ய வழி ஏற்படுத்தியுள்ளது. உண்மை யான உதிரிபாக உற்பத்தியாளர் கள் தவிர சிறு குறு உற்பத்தி யாளர்களும் இந்த புதிய கொள் கையால் பயன் பெறுகிறார்கள் என்று சிஐஐ இயக்குநர் சந்த்ரஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே வடி வமைப்பது, மேம்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வதற்கு இந்த கொள்கை அதிக முன்னுரிமை கொடுக்கிறது. இது உள்நாட்டில் வடிவமைப்பு துறை சார்ந்த நடவடிக்கைகள் வளர மிகப் பெரிய தூண்டுகோல் என்றார்.