

கட்டுமானத்துறை நிறுவனமான புஞ்ச்லாய்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெயராம் பிரசாத் சாலசனி தன்னுடைய பொறுப்பில் மார்ச் 31-ம் தேதி வரை இருப்பார் என்று பங்குச்சந்தைக்கு புஞ்ச்லாய்ட் தெரிவித்திருக்கிறது.
அதே சமயத்தில் நிறுவ னத்தின் தலைமை நிதி அதிகாரி ஷாமிக் ராய் உடனடி யாக விலகுகிறார் என்று அறி விக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முக்கியமான இருவர் வெளியேறினாலும், இந்த பொறுப்பை அடுத்து யார் கையாளுவார் என்பது குறித்து புஞ்ச்லாய்ட் நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
அதே சமயத்தில் நிறுவனத் தின் தலைவர் அதுல் புஞ்சின் மகன் ஷிவ் புஞ்ச் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக உடனடி யாக நியமிக்கப்படுகிறார். இதற்கு முன்பாக இவர் நிறுவனத்தில் மேலாளராக ( தொழில் உத்தி மற்றும் மேம்பாட்டு பிரிவில்) பணியாற்றினார்.