இந்தியா - ரஷ்யா ஹெலிகாப்டர் ஒப்பந்தம்: விரைவில் அமலுக்கு வரும்

இந்தியா - ரஷ்யா ஹெலிகாப்டர் ஒப்பந்தம்: விரைவில் அமலுக்கு வரும்
Updated on
1 min read

இந்தியா மற்றும் ரஷியா இடையேயான 200 கோடி டாலர் மதிப்புள்ள இரண்டு ஹெலி காப்டர் ஒப்பந்தங்கள் இந்த வருட இறுதிக்குள் அமலுக்கு வரும் என ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கும் ரோஸ்டெக் நிறு வனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது பேச்சு வார்த்தை முன்னேற்றம் அடைந் துள்ளது இந்த வருட இறுதிக்குள் முடிவு எட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காமோவ் மற்றும் எம்ஐ 17 ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்களுக்குரிய ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோ சென்றிருந்தார். அப்போது இந்தியா ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே காமோவ் -226டி ஹெலிகாப்டரை இரண்டு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்ய இரு அரசுகளுக்கிடையே யான ஒப்பந்தம் போடப்பட்டது.

சமீபத்தில் ரஷிய ஹெலிகாப்டர் மற்றும் ரோஸ்டெக் ஆகிய நிறு வனங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து விவாதிப்ப தற்காக இந்தியா வந்தனர். மேலும் இந்த ஒப்பந்தத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதும் குறித்தும் இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்கு ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை தனது இந்திய பங்குதாரராக ரஷியா ஏற்கெனவே தேர்ந்தெடுத்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் புதிய ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த தொடங்கி விட்டது.

இந்த அதிகாரிகள், ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை விதித் துள்ளனர். இறுதிக் கட்ட ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் முடியும் என்று ரோஸ்டெக் நிறுவனத்தின் விக்தோர் கிளடோவ் தெரி வித்துள்ளார். மேலும் மற்ற நாடு களை விட இந்தியாவில் மிக நல்ல கூட்டுப் பொருட்கள், எலெக்ட் ரானிக் பொருட்கள் கிடைக்கின்றன என்று விக்தோர் கிளடோவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in