பங்குச்சந்தையில் சரிவு

பங்குச்சந்தையில் சரிவு
Updated on
1 min read

இராக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகிய பிரச்சினைகள் இந்திய பங்குச் சந்தைகளை வெகுவாகப் பாதித்தன. முன்தினம் எழுச்சி பெற்ற பங்குச் சந்தை புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. 275 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 25246 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தையில் 73 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7588 புள்ளிகளானது.

இராக்கில் உள்ள பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தீவிரவாதிகள் தாக்கி யதாக செய்தி வெளியானது. இதனால் பிற்பகலில் 400 புள்ளிகள் வரை பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.

ஜூலை மாதத்துக்கான கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 106.77 டாலராக நியூயார்க் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீடுகளின் வரத்து குறைந்தது, ரூபாய் மதிப்பு உயர்ந்தது ஆகியன பங்குச் சந்தையை வெகுவாகப் பாதித்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.39 ரூபாயாக இருந்தது.

முக்கியமான 12 துறைகளின் பங்குகளில் 11 துறைகளின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் பொருள், வங்கி, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிஹெச்இஎல் நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 3.21 சதவீதமும், டிசிஎஸ் 2.43%, என்டிபிசி 2.26%, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.12%, டாடா மோட்டார்ஸ் 2.08%, சன் பார்மா 1.98%, ஐசிஐசிஐ வங்கி 1.98%, டாடா ஸ்டீல் 1.89 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in