Published : 05 Mar 2016 10:48 AM
Last Updated : 05 Mar 2016 10:48 AM

இவரைத் தெரியுமா?- அமிரிதான்ஷு கெய்தான்

பேட்டரிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எவரெடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் எவரெடி நிறுவனத்தில் நிரந்தர இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

லிட்டெஸ் இந்தியா, நித்யா ஹோல்டிங்க்ஸ், யுனைட்டட் மெஷின்ஸ் ஆகிய நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து மெக்நல்லி இன்ஜினீயரிங் நிறுவனத்தில் அன்றாட அலுவல் பொறுப்புகள் ஏதும் இல்லாத இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

பேகார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பில் நிர்வாக குழுவில் உறுப்பினராக உள்ளார்.

மும்பையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் இளநிலை பட்டமும் லண்டன் பிஸினஸ் கல்வி மையத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x