Published : 03 Nov 2021 05:35 PM
Last Updated : 03 Nov 2021 05:35 PM

17,130 டிராக்டர்கள் விற்று சோனாலிகா சாதனை

சென்னை

டிராக்டர்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 17,130 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் பண்டிகைக் கால கொண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனையொட்டி சோனாலிகா நிறுவனம் டிராக்டர் விற்பனையை முழு வீச்சில் தீவிரப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் அறுவடை மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்கான கருவிகள் தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவின் முன்னணி பிராண்டாகிய சோனாலிகா, டிராக்டர்கள் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் விவசாயிகள் சார்ந்த பணிகளுக்காக, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிகம் கிடைக்கும் வகையில் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் விளைவாக இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை நடப்பு நிதி ஆண்டின் (2021-22) முதல் ஏழு மாதங்களில் 85,068 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 6.56% வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 79,829 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. நம் நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவது அதிகரித்துவரும் சூழலில் சோனாலிகா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 17,130 டிராக்டர்களை விற்பனை செய்து 5.5% வளர்ச்சியை எட்டியதோடு இத்துறை வளர்ச்சியைவிட (எதிர்பார்க்கப்படுவது: 3.6%) கூடுதல் வளர்ச்சியை எட்டியுள்ளது.

சோனாலிகாவின் உயர் தொழில்நுட்ப டிராக்டர்கள் அனைத்தும் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள உலகின் முதலிடத்தைப் பிடித்த செங்குத்தான ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி ஆலையிலிருந்து வெளிவருகின்றன. உள்நாட்டு உற்பத்திக்கு உள்நாட்டு உதிரிபாகம் என்ற நிலையிலிருந்து உள்நாட்டிலிருந்து சர்வதேச அளவுக்குத் தயாரிப்புகளை அனுப்பும் அளவுக்கு சர்வதேச அளவில் தனது பங்களிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு டிராக்டர் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சோனாலிகா தனது சர்வதேச சந்தை பங்களிப்பை 25% அளவுக்கு அதிகரித்துக் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் மிகச் சிறப்பான செயல்பாடு குறித்து சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் விவசாயிகள் தங்களிடம் உள்ள டிராக்டர்களின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புவர். இதன் மூலம் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளவும் முயல்வதோடு வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவர்.

விவசாயத்தில் நவீன நுட்பங்களைப் புகுத்துவது, நவீன வேளாண் சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம்தான் விளைச்சலை அதிகப்படுத்த முடியும். அந்த வகையில் டிராக்டர்களுக்கான சந்தை இந்தியாவில் விரிவடைந்தது. அதில் சோனாலிகா நிறுவனம் தனது பொறுப்பை உணர்ந்து உலகம் முழுவதும் ஏற்பட்டுவரும் வேளாண் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருப்பதை நோக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x