

செயல்படாத நிலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் நான்கு ஆண்டுகள் பழமையான இபிஎப் கணக்கு களுக்கு வட்டி அனுமதிக்க முடி வெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வட்டி அளிக்க முடிவெடுத்துள்ள இபிஎப் கணக்கில் தொடர்ந்து 36 மாதங்கள் ஊழியர்கள் அல்லது நிறுவனங்கள் பங்களிப்பு செலுத் தாமல் இருக்க வேண்டும்.
இபிஎப் ஆணையத்தின் உயர் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர் குழு (CBT) இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த அமைப்பு முத்தரப்பு குழுவாகும். இதில் அரசு அதிகாரிகள், தொழில் துறையினர், பணியாளர்கள் இடம் பெறுவார்கள். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தாத்தரேயா இதன் தலைவராக இருக்கிறார்.
செயல்படாத நிலையில் உள்ள 15 கோடி கணக்குகளில் சுமார் 4 கோடி கணக்குகள் திரும்ப பெற்றுள்ளனர். செயல்படாத கணக்குகள் ரூ.27,000 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
வேலையிலிருந்து விலகிய தொழிலாளர்கள் இபிஎப் கணக்குகளை செயல்படாத நிலை யில் வைத்துள்ளனர். இதை புதிய செயல்படும் கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ள ஊக்கப்படுத்தும் முயற்சியாக வட்டி அளிக்க இபிஎப் ஆணையம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.