ஜியோவின் அடுத்த அதிரடி அறிமுகம்: புதிய மொபைல் போன் நெக்ஸ்ட் 

ஜியோவின் அடுத்த அதிரடி அறிமுகம்: புதிய மொபைல் போன் நெக்ஸ்ட் 
Updated on
2 min read

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ உருவாக்கியுள்ள புதிய மொபைல் போன் தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளை நெருங்குகிறது. தொடங்கும்போதே அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் என டெலிகாம் சந்தையைக் கைப்பற்றியது. தற்போது டிஜிட்டல் சந்தையின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் தன் வசம் இழுக்க முயற்சித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.

ஃபேஸ்புக், கூகுள், இன்டெல், குவால்கம் என ஜியோவில் முதலீடு செய்து வருகின்றன. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் தர உள்ளதாகவும் ரிலையன்ஸ் ஜியோவின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டே அறிவித்தார்.

இந்த இயங்குதளம் 4ஜி அல்லது 5ஜி திறன் கொண்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்காக கூகுள் 4.5 பில்லியன் டாலர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது.

இதன் மூலம் 10 கோடி ஸ்மார்ட்போன்களை சந்தைக்குக் கொண்டுவரவும் இருப்பதாகவும், அறிமுக சலுகையாக குறிப்பிட்ட காலத்துக்கு இலவச இணைய வசதி உள்ளிட்ட சேவை வழங்கவும் ஜியோ நிறுவனம் திட்டமிட்டு வந்தது.

இந்தநிலையில் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவக்கியுள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் புதிய போன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. பட்ஜெட் விலையில் வெளியாகி உள்ள இந்த போன் மாத தவணையில் கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. தீபாவளி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

ஜியோ போன் நெக்ஸ்டின் விலை இது தான். பிரகதி ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசசர், முகப்பு கேமரா 8 எம்.பி, ரியர் கேமரா 13 எம்பி, 5.45 இஞ்ச் மல்டி டச் டிஸ்பிளே, 2 ஜிபி ரேம், எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி மெமரி, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் டூயல் சிம்முடன் இநு்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த போனை 6,499 ரூபாய் செலுத்தி போனை பெற்றுக் கொள்ளலாம். தவணையில் பெற விரும்புவர்கள், இந்தபோனை ரூ. 1999 முன் பணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மாத தவணையாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஜியோ வலைத்தளம் மற்றும் ஜியோ ரீடெயில் மார்ட்டில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in