ஏப்ரல் 8-ம் தேதி முதல் இந்தியாவில் ஐபோன் எஸ்இ

ஏப்ரல் 8-ம் தேதி முதல் இந்தியாவில் ஐபோன் எஸ்இ
Updated on
1 min read

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான ஐபோன் எஸ்இ வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சிறிதளவு விலை குறைவான ஸ்மார்ட்போனை ஆப்பிள் வெளியிட்டது. இந்தியா மற்றும் சீனா சந்தையை குறிவைத்து இந்த மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட் போன் விலை அமெரிக்காவில் 399 டாலராகும். இந்திய சந்தையில் 39,000 ரூபாய்க்கு இந்த மாடல் கிடைக்கும். சமீபத்தில் வெளியான ஐபோன் 6 எஸ்ஸின் விலையை விட 40 சதவீதம் இந்த போனின் விலை குறைவு. ஐபோன் 6எஸ்-ன் விலை 649 டாலராகும்.

சில ஆன்லைன் ஸ்டோர்களில் ஐபோன் 5, 25,000 ரூபாயில் கிடைத்தாலும் இந்த மாடல் 39000 ரூபாயாகும். 4 அங்குல தொடுதிரை யோடு, நான்கு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in