

அந்நிய முதலீடுகளை மத்திய அரசு பல்வேறு துறைகளில் வரவேற்றாலும் சேவைத்துறை யில் அந்நிய முதலீடு அதிகரித் துள்ளது. 2015-16-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் மொத்தம் 425 கோடி டாலர் முதலீடு செய்யப் பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் 85 சதவீத வளர்ச்சியாகும்.
வங்கி, காப்பீடு, வெளிப்பணி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூரியர் மற்றும் தொழில்துறை சோதனை உள்ளிட்டவற்றில் அந்நிய நேரடி முதலீடு 229 கோடி டாலராக இருந்தது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்களிப்பு 60 சதவீத மாக உள்ளது. இத்துறையில் அந்நிய முதலீட்டின் பங்களிப்பு 17 சதவீத அளவுக்கு உள்ளது.
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், ஹார்ட்வேரில் 530 கோடி டாலரும், வர்த்தகத்தில் 271 கோடி டாலரும், ஆட்டோமொபைலில் 178 கோடி டாலரும், ரசாயனத் துறையில் 119 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்தியா வில் அந்நிய நேரடி முதலீடு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 3,920 கோடி டாலர் வந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில் முதலீடு 2,878 கோடி டாலராக இருந்தது.
அந்நிய முதலீட்டுக்கான வரையறை இந்த பட்ஜெட்டில் தளர்த்தப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் அதிக அளவு அந்நிய முதலீடு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. காப்பீடு மற்றும் ஓய்வூதிய துறைகளில் 49 சதவீத அளவுக்கு அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று பட் ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு 26 சதவீத அளவுக் குத்தான் அனுமதிக்கப் பட்டிருந்தது.