

இ-காமர்ஸ் துறையின் முதல் பொதுப்பங்கு வெளியீட்டை இன்பிபீம் நிறுவனம் வெளியிடுகி றது. இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு 1.1 மடங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.25 கோடி பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. 1.37 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 86 சத வீதம் மட்டுமே பரிந்துரையானது. ஆனால் நிறுவன முதலீட்டாளர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப் பட்ட பங்குகளில் 2.23 மடங்கு பரிந்துரை ஆனது. சிறுமுதலீட்டா ளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் 1.25 மடங்கு பரிந்துரை யானது.
ஒரு பங்கின் விலையாக ரூ.360 முதல் 432 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று டன் பரிந்துரை காலம் முடி வடைந்தது. இந்த நிறுவன பங்கு கள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தையில் பட்டியலிட திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல இணையதளங்களை இந்த நிறுவ னம் நடத்தி வருகிறது. இன்பிபீம், பில்ட்ஏபஜார், இன்செப்ட் உள் ளிட்ட இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியில் 75 சதவீதம் லாஜிஸ்டிக்ஸ், மென்பொருள் உள்ளிட்டவற் றுக்காக செலவு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரை ஹெல்த்கேர் குளோபல், குயிக் ஹீல் டெக்னாலஜீஸ், டீம்லீஸ் சர்வீசஸ், பிரிசிஷன் கேம்ஷாப்ட்ஸ் மற்றும் பாரத் வயர் ரோஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களின் ஐபிஓ வெளியாகி உள்ளன.