

தங்கப் பத்திரத் திட்டம் விற்பனை அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதுகுறித்த விலை விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு 2021 அக்டோபர் 21-ம் தேதி வெளியிட்ட அறிவிப்புன்படி தங்கப் பத்திரங்கள் 2021 அக்டோபர் 25-ம் தேதி முதல் 29-ம்தேதி வரை விற்கப்படும்.
இது நவம்பர் 2-ம் தேதி அன்று வழங்கப்படும். தங்கப்பத்திரத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,765 விற்கப்படும் என ரிசர்வ் வங்கி 2021 அக்டோபர் 22-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்குபவர்களுக்கும் கட்டணத்தை டிஜிட்டல் மூலம் செலுத்துபவர்களுக்கும் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து முடிவெடுத்துள்ளது. இந்த முதலீட்டாளர்களுக்கு தங்கப்பத்திரத்தின் விற்பனை விலை ஒரு கிராமுக்கு ரூ.4,715 ஆக இருக்கும்.