

ஜிண்டால் குழுமத்தின் அங்கமான ஜிண்டால் ரியால்டி நிறுவனம் ஹரியாணா மாநிலத்தில் ரூ. 1,800 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தில் நடைபெறும் ‘ஹாப் பனிங் ஹரியாணா’ எனப்படும் முதலீட்டாளர் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
சோனேபட், குருஷேத்திரம் ஆகிய இரு பகுதிகளில் ரியல் எஸ்டேட் பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மொத்தம் 4 பெரிய திட்டப் பணிகளை ஜிண்டால் ரியால்டி மேற்கொள்ள உள்ளது.
ஐஐடியுடன் என்டிபிசி ஒப்பந்தம்
தேதிய அனல் மின் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனம் டெல்லி ஐஐடி கல்வி மையத்துடன் ஒப்பந்தம் செய் துள்ளது. மின் தயாரிப்பு தொடர்பாக பரஸ்பரம் இரு தரப்புக்கும் பயனுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
வடிவமைப்பு, வெப்ப பரிமாற் றம், வெப்ப உற்பத்தி, ஏஐ, சூரிய மின்னுற்பத்தி உள்ளிட்ட துறை களில் ஐஐடி-யுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளை என்டிபிசி மேற்கொள்ளும்.
16 எப்டிஐ திட்டம் எப்ஐபிபி அனுமதி
16 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி அளித்துள்ளது. மொத்தம் ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனக்குள்ள பங்கு அளவை 49 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள நிப்பான் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் 4 அந்நிய காப்பீட்டு நிறுவனங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது.
யெஸ் வங்கியில் தற்போது உள்ள அந்நிய முதலீட்டு வரம்பை 41 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்துக் கொள்ளும் முடிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 34 அனுமதி கோரிக்கை கள் வந்திருந்தன. அதில் 16 மனுக் களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தாக எப்ஐபிபி தெரிவித்துள்ளது.