

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் (ஜேஎஸ்பிஎல்) நிறுவனத்தின் தரமதிப்பீட்டை கிரிசில் நிறு வனம் குறைத்தது. மார்ச் 9-ம் தேதி இந்த நிறுவனத்துக்கு `டி’ தரக்குறி யீட்டை கிரிசில் வழங்கியது. இந்த குறியீடு வழங்கப்படும் பட்சத்தில் முதலீடு கிடைக்காமல் போகும் கூடிய வாய்ப்பு அதிகம்.
இந்த நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் பிராங்க்ளின் டெம் பிள்டன் உள்ளிட்ட சில மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருந்தன. இப்போது அந்த கடன் பத்திரங் களை பிராங்க்ளின் டெம்பிள்டன் முழுமையாக விற்றுவிட்டது.
இரண்டு கட்டங்களாக இந்த பத்திரங்களை பிராங்க்ளின் விற்றது. பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 10-ம் தேதி ஆகிய தேதி களில் கடன்பத்திரங்களை விற்கப் பட்டதாக மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் செய்தி தொடர் பாளர் கூறினார். இப்போது ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் பிராங்க்ளின் முதலீடு ஏதும் இல்லை. இந்த நிறுவனத்தில் ரூ.1,600 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த முதலீடுகளை பிராங்க்ளின் விற்றிருந்தாலும், ஜேஎஸ்பிஎல் முதலீட்டில் பலந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. 25 சதவீதத்துக்கும் மேல் நஷ்டத்தில் இந்த கடன் பத்திரங்களை விற்றி ருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
பிராங்க்ளின் டெம்பிள்டன் தவிர ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் ஆகிய நிறுவனங்கள் ஜே.எஸ்பிஎல் கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தன.
எங்களது முதலீட்டு குழு இந்த கடன் பத்திரத்தின் மீதான ரிஸ்க்கை உணர்ந்திருக்கிறது. முதலீட்டா ளர்கள் எங்கள் மீது வைத்தி ருக்கும் நம்பிக்கையை உணர்ந்து செயல்படுவோம். தவிர எங்களது கடன் சார்ந்த திட்டங்களில் ஜேஎஸ்பிஎல் கடன் பத்திரத்தில் செய்துள்ள முதலீடு 0.31 சதவீதம் மட்டுமே. நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள அளவில் மட்டுமே முதலீடு செய்திருக்கிறோம் என்று ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி கூறினார்.
ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் இந்த நிறுவனத்தில் 49 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளது. ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதால் எங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.