Last Updated : 23 Mar, 2016 10:00 AM

 

Published : 23 Mar 2016 10:00 AM
Last Updated : 23 Mar 2016 10:00 AM

சிறு நகரங்களில் பிபிஓ தொடங்கப்படும்: அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு

வேலைவாய்ப்பை அதிகரிக்க சிறு நகரங்களில் பிபிஓ தொழில்களைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இதன் மூலம் இந்திய கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

புதுடெல்லியில் நடந்த டிஜிட்டல் மீடியா மாநாட்டில் பேசிய ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது:

இந்திய சிறு நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்க முடியும். இதனால் இளைஞர்கள் நகரங் களுக்கு வேலை தேடி இடம் பெயர்வது குறையும் என்றார்.

ஆப்டிக்கல் பைபர்

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், இந்தியா வின் கிராமப் பகுதிகளில் 398 கிலோ மீட்டர்களுக்கு மட்டுமே ஆப்டிக்கல் பைபர் கேபிள் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு இந்த தொழில்நுட்பம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிலோமீட்டர்கள் பைபர் ஆப்டிகல் கேபிள் தொழில் நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பத்தோடு இணைந்த திறமை யும் அவசியமாகும்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு

இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி துறை உள்ளது. சில ஆண்டு களில் நாட்டில் அதிக மொபைல் உற்பத்தியாளர்கள் உருவாகியுள் ளனர். கடந்த ஆண்டைவிட 83 சதவீதம் உற்பத்தி அதிகரித் துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது கிட்டத் தட்ட அனைத்து முக்கிய பிராண்ட் செல்போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

மே 2014க்கு முன்னர் மின்னணு உற்பத்தியில் ரூ.11,000 கோடி அளவுக்குத்தான் முதலீடுகள் இருந்தது. தற்போது ரூ.1,28,000க்கும் அதிகமாக முதலீடுகள் வந்துள்ளன. வெளிப் படைத்தன்மை, ஜனநாயகம், நடுநிலை மற்றும் பன்மை தன்மை கொண்ட ஊடகங்கள் மக்களின் சக்தியாக திகழ்கின்றன. இணையம் வளர்ந்து வருவதும் மேம்பாட்டுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

மேலும் இணையம் பாரபட்ச மில்லாமல் இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், டிஜிட்டல் துறையில் சக்தி மிக்க நாடாக இந்தியா வளர்வதற்கு ஏற்பவே டிஜிட்டல் இந்தியா மிஷன் இலக்கு வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மார்ச் 2017-ல் தொடங்கப்படும்

தபால் துறையில் கீழ் செயல்பட உள்ள பேமென்ட் வங்கி 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இப்போதுதான் மத்திய அமைச்சரவையிடமிருந்து கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்தது. விரைவில் பேமென்ட் வங்கி அமைக்கப்படும் என்று டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் கூறினார்.

``நான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் 230 தபால் நிலையங்கள் மட்டுமே கோர் பேங்க் முறையில் இணைக்கப்பட்டன. தற்போது 20,494 தபால் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத இறுதியில் 25,000 தபால் நிலையங்கள் இணைக்கப்படும். இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை அதிக கிளைகள் கோர் பேங்கிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளன,’’ என்பதை பெருமையாகக் கூற முடியும் என்றார்.

அதேபோல ஏடிஎம்களின் எண்ணிக்கையும் 4-ல் இருந்து 850 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாத மத்தியில் 1,000 ஆக உயரும் என்றார். எஸ்பிஐ வங்கியில் 16,333 கிளைகள் இணைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x