Published : 22 Mar 2016 09:43 AM
Last Updated : 22 Mar 2016 09:43 AM

குமுதம் நிறுவனர் மகன் ஜவஹர் பழனியப்பன் ஃபெமா விதிகளை மீறவில்லை: ஆர்பிஐ அறிக்கையில் சான்று

குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன் டாக்டர் ஏ.ஜவஹர் பழனியப்பன் வசம் உள்ள பங்குகளில் எவ்வித அந்நியச் செலாவணி நிர்வாக சட்ட விதி (ஃபெமா) மீறல் இல்லை என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. இதனால் குமுதம் குழும பொறுப்புகள் முழுக்க மீண்டும் அவர் வசம் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இதய மருத்துவ நிபுணரான டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் வசித்து வந்தவர். சட்ட ஆலோசனையின்பேரில் இவர் 2011-ம் ஆண்டு குழும நிர்வாகத்தில் பங்கேற்க இந்தியா வந்தார்.

குழுமத்தின் நிர்வாக இயக்கு நராயிருந்த பி. வரதராஜன் பல் வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜவஹர் பழனி யப்பன் குற்றம் சாட்டினார். இதனால் இருதரப்புக்குமிடையே எழுந்த பிரச்சினை 2010-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர புரிந்து ணர்வு ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் (எம்ஓயு) முடிவுக்கு வந்தது.

இதன்படி குழும நிர்வாகத்தில் இருந்த 9 இதழ்களில் 2 இதழ்கள் வரதராஜன் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் பி. னிவாசன் வசமும், மற்ற 7 இதழ்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவரது தாய் கோதை அண்ணாமலை வசமும் சென்றன. இருதரப்பு பிரிவினை நடவடிக்கைகள் முழுவதும் ஒரு தனியார் தொழில்முறை மதிப்பீட்டு நிறுவனம் மூலம் மேற் கொள்ளப்பட்டது. இதனிடையே 2011-ம் ஆண்டு ஒப்பந்த விதி களை மீறிவிட்டதாக வரதரா ஜனிடமிருந்து தனக்கு தகவல் வந்ததாக ஜவஹர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரதராஜன் ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், ’ஜவஹர் பழனியப்பன் வசம் உள்ள பங்குகளில் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்ட விதி மீறல் உள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு ஆர்பிஐ தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட பதில் அறிக்கையில், `ஜவஹர் பழனியப்பன் வசம் உள்ள பங்குகள் எதுவும் புதிதாக வாங்கப்படவில்லை எனவே இது ஃபெமா சட்ட விதிகளின் கீழ் வராது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஜவஹர் பழனியப்பனுக்கு உள்ள பங்குகளில் எதுவும் அந்நியச் செலாவணி முதலீடு மூலம் வாங்கப்படவில்லை. அவை அனைத்தும் அவரிடமே உள்ளன. இந்த அடிப்படையில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) என்ற வரையறைக்குப் பயன்படுத்தப்படும் ஃபெமா சட்டம் 1999 விதிகள் இதற்குப் பொருந்தாது என்று இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகே ரிசர்வ் வங்கி இந்த பதிலை அளித்துள்ளது.

இதுகுறித்து ‘’தி இந்து’’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கூறியதாவது:

குமுதம் குழும வழக்கின் அடிப்படையான ஒரு பிரச்சினையில் ரிசர்வ் வங்கி அளித்துள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் எனது சகோதரி கிருஷ்ணா மெய்யம்மைக்கும் இந்தத் தீர்ப்பு சாதகமாக அமைந்திருக்கிறது. இதனால் நாங்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறோம். குறிப்பாக, என் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. எனது தந்தை தொடங்கிய பாரம்பரியமிக்க இந்த நிறுவ னத்தை நல்லபடியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்தத் தீர்ப்பு வழிவகை செய்தி ருக்கிறது. மேலும், நிலுவையில் உள்ள பிற வழக்குகளிலும் உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தவிர, 2010-ம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிர்வாகத்திலிருந்து வெளியேற வரதராஜனே விருப்பம் தெரிவித் திருந்தார். இப்போது அது தொடர்பாக அவரது சம்மதத்தை எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு ஜவஹர் பழனியப்பன் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x