Published : 17 Oct 2021 12:08 PM
Last Updated : 17 Oct 2021 12:08 PM

வருமான வரித்துறை சோதனை: ரூ.2.75 கோடி பறிமுதல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தேசியத் தலைநகர் மண்டலம், ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனைகளின் போது இறக்குமதிக்கான மதிப்புக் குறைக்கப்பட்ட ஏராளமான ரசீதுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

தேசியத் தலைநகர் மண்டலம், ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் மடிக்கணினிகள், செல்பேசிகள் மற்றும் அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்யும், வியாபாரம் செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின் போது மதிப்புக் குறைக்கப்பட்ட ரசீதுகள் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் பற்றிய தவறான தகவல்கள், போலியான ஆவணங்கள் மற்றும் நாட்குறிப்புகள், டிஜிட்டல் ஆதாரங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
எச்டிஎம்ஐ கேபிள்ஸ்’ என்ற நிறுவனம் ரூ.3.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக கணக்கில் கொண்டு வந்துள்ளது. ஆனால் அது ரூ.64 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகள், செல்பேசிகள் போன்றவற்றை இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சோதனையின் போது ரூ.2.75 கோடி கணக்கில் வராத ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x