Published : 27 Mar 2016 02:33 PM
Last Updated : 27 Mar 2016 02:33 PM

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் இந்தியா அதிக முதலீடு: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

2015-ம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் முதலீடு செய்வதில் இந்தியா மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. பிற வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற் பத்தி ஆகியவற்றில் இந்த இரு நாடுகளும் அதிகம் முதலீடு செய் திருக்கின்றன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

`2016-ம் ஆண்டில் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளங்களின் சர்வ தேச சூழல்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியுள்ளது. இந்த அறிக்கை யில் கூறப்பட்டிருப்ப தாவது:

வளரும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் மொத்தம் 15,000 கோடி டாலர் தொகையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் முதலீடு செய்திருக்கின்றன. இது 2014-ம் ஆண்டை விட 19 சதவீத அதிகம் ஆகும். ஆனால் 2015-ம் ஆண்டில் வளர்ந்த நாடுகள் செய்துள்ள முதலீடு 8 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் வளர்ந்த நாடுகள் 13,000 கோடி டாலர் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் முதலீடு செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

வளர்ந்த நாடுகளை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங் களில் வளரும் நாடுகள் அதிகமாக முதலீடு செய்திருப்பது இதுவே முதல்முறை.

வளரும் நாடுகளில் சீனா தான் முதலீட்டை மிகவும் அதிகப் படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் மீதான முதலீட்டை 17 சதவீதம் அதிகரித் துள்ளது. மொத்தம் கடந்த வரு டத்தில் 10,200 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறது. மேலும் முதல் 10 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, சிலி ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

2014-ம் ஆண்டை விட 75 சதவீதம் அதிகமாக 2015-ம் ஆண்டில் சூரிய ஆற்றல் மீது முதலீடு செய்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் இந்தியா 460 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறது. ஆனால் இது 2011-ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீட்டை விட குறைவுதான்.

கடந்த 2015-ம் ஆண்டில் அதானி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. அதே போன்று என்டிபிசி நிறுவனம் காத்ரி ஆலையில் 250 மெகா வாட் உற்பத்தி செய்ய திட்ட மிட்டுள்ளது. இது போன்ற பெரிய திட்டங்கள் வந்திருப்பதே முதலீடு அதிகமானதற்கு காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. முதல் முறையாக காற் றாலை ஆற்றலை விட சூரிய ஆற்றல் மீது அதிக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

குறைந்த கார்பன் அளவு கொண்ட வாழ்க்கை சூழலுக்கு புதிப்பிக்கத்தக்க ஆற்றல் முக்கிய மானதாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலீடு அதிகரித்திருப்பது இந்த சூழ்நிலையை உறுதிப் படுத்தும் விதமாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை சூழலியல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் அசிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x