செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.4000 கோடி திருப்பிச் செலுத்த விஜய் மல்லையா ஒப்புதல்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்

Updated on
3 min read

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்காக வாங்கிய கடனில் ரூ.4,000 கோடியை வரும் செப்டம்பர் மாதத் துக்குள் திருப்பிச் செலுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தொழில திபர் விஜய் மல்லையா தெரிவித் துள்ளார். தனது வழக்கறிஞர் மூலம் சீலிடப்பட்ட உறையில் நேற்று இந்த உத்திரவாதத்தை அவர் அளித்துள்ளார். முதற் கட்டமாக ரூ.2,000 கோடியை அளிப்பதாகவும், செப்டம்பர் மாத இறுதிக்குள் மீதமுள்ள ரூ.2,000 கோடியை அளிப்பதாகவும் அவரது வழக்கறிஞர் சி.எஸ். வைத்யநாதன் உச்ச நீதிமன்றத்துக்கு கூறியுள்ளார். இதையடுத்து மல்லையாவுக்கு கடன் அளித்த வங்கிகள் மல்லையாவின் இந்த ஒப்புதல் குறித்து ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கிங்பிஷர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். மல்லையாவுக்கு லண்டனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வர நோக்கம் உள்ளதா இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர், மல்லையாவுக்கு எதிராக ஊடகங்கள் கசப்பான சூழலை உருவாக்கியுள்ளன. இதற்கு முந்தைய காலங்களில் ஊடகங்கள் உருவாக்கிய இத்தகைய சூழலால் சிலருக்கு அடி உதை கூட கிடைத்திருக்கிறது. எனவே, அவர் இப்போதைக்கு இந்தியா திரும்புவதாக இல்லை என்றார். மல்லையாவின் வழக்கறிஞர் கருத்தை மறுத்த நீதிபதி குரியன், ஊடகங்களை குறை சொல்லாதீர், ஊடகங்கள் மக்கள் நலனுக்காகவே செயல்படுகின்றன. இந்த வழக்கில், ஊடகங்களின் நோக்கம் வங்கிகளில் வாங்கிய கடனை மல்லையா திருப்பி செலுத்த வேண்டும் என்பது மட்டுமே என்று குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், விஜய் மல்லையாவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்த பிறகு முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார். இதனையடுத்து அவருக்கு கடன் அளித்த வங்கிகள் ஒரு வாரத்துக்குள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

என் மகனை திட்டாதீர்கள்!

நேற்று ட்விட்டர் சமூக தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள விஜய் மல்லையா, எனது தொழிலில் என் மகன் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே, என் மகன் மீது யாரும் பழி சொல்லாதீர்கள். வேண்டுமானால் என்னை திட்டிக் கொள்ளுங்கள் என்று ட்விட் செய்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து கடந்த 2-ம் தேதி வெளியேறினார்.

அவர் நாட்டைவிட்டு வெளியேறியது முதல் அவரது மகன் சித்தார்த் மல்லையா ட்விட்டரில் கடுமையாக விமர்சிக் கப்பட்டு வருகிறார். இதனால் விஜய் மல்லையா சித்தார்த் மல்லையாவுக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.

மல்லையா வங்கிகளிடம் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தாவிட்டால் சட்டரீதியாக அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் ஜேட்லி எச்சரித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in