வருமான வரி: இ-ஃபைலிங் போர்ட்டலில் 2 கோடி கணக்குகள் தாக்கல் 

வருமான வரி: இ-ஃபைலிங் போர்ட்டலில் 2 கோடி கணக்குகள் தாக்கல் 
Updated on
1 min read

வருமான வரித் துறையின் இணையதளம் அக்டோபர் 13 வரை 2 கோடிக்கும் அதிகமான வருமான வரி தாக்கல்களை பெற்றுள்ளது.

வருமான வரித்துறை கடந்த ஜூன் 7 அன்று (www.incometax.gov.in) புதிய இணையதளத்தை தொடங்கியது. இந்த புதிய தளத்தின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிரமங்களை வரி செலுத்துவோர் குறிப்பிட்டனர். பல தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு தளத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 வரை 13.44 கோடிக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் உள்நுழைந்துள்ளனர். சுமார் 54.70 லட்சம் வரி செலுத்துவோர் தங்கள் கடவுச்சொற்களைப் பெற 'மறக்கப்பட்ட கடவுச்சொல்' வசதியைப் பெற்றுள்ளனர்.

அனைத்து வருமான வரி அறிக்கைகளையும் இ-தாக்கல் செய்ய முடியும். 2021-22-ம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் தளத்தில் செய்யப்பட்டுள்ளன, இவற்றில் வருமான வரி தாக்கல்கள் 1 மற்றும் 4 86 சதவீதம் ஆகும். ஆதார் அடிப்படையிலான ஓடிபி மூலம் 1.49 கோடிக்கு அதிகமான தாக்கல்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

2021-22 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யாத அனைத்து வரி செலுத்துவோரும் விரைவில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in