

பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்தவிலைக் குறியீடு (டபிள்யூபிஐ) பிப்ரவரி மாதம் மேலும் சரிந்துள்ளது. ஜனவரி மாதம் -0.90 சதவீதமாக இருந்த மொத்த விலைக் குறியீடு பிப்ரவரி மாதத்தில் -0.91 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 16-வது மாதமாக சரிந்துள்ளது. பண வீக்கத்தின் அடிப்படையிலான ஆண்டு மொத்த விலைக் குறியீட்டு புள்ளிவிவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
உணவு பொருட்களின் குறியீடு ஜனவரி மாதத்தில் 6.02 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார குறியீடு -6.40 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி மாதத்தில் -9.21 சதவீதமாக இருந்தது. இதற்கிடையே அனைத்து துறைக்குமான மொத்த விலை குறியீடு புள்ளி விவரங்கள் -0.73 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் -1.06 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.