Last Updated : 10 Mar, 2016 10:07 AM

 

Published : 10 Mar 2016 10:07 AM
Last Updated : 10 Mar 2016 10:07 AM

தொழிலாளர் சட்டங்களிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்களிலிருந்து மூன்று ஆண்டுகள்வரை விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவது மற்றும் ஊக்கப்படுத்தும் விதமாக 9 தொழிலாளர்கள் சட்டங்க ளிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார். தொடக்க நிறுவனங்களுக்கு பல்வேறு கொள்கைகள் மற்றும் ஆய்வு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் சட்டங்களி லிருந்து விலக்கு அளிக்க முடி வெடுத்துள்ள மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய தொழிலாளர் நல ஆணையங்களுக்கு ஆலோசனை அளித்துள்ளது என்று அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள், ஒன்பது தொழிலாளர் சட்டத்தி லிருந்து விலக்கு குறித்து சுய அறிவிப்பு அளிக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் அடிப்படையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படாது என்றார்.

அமைச்சரின் அறிக்கை அடிப்படையில், தொழில்துறை தாவா சட்டம் 1947, தொழில் சங்க சட்டம் 1926, கட்டிடம் மற்றும் பிற கட்டுமான பணியாளர்கள் சட்டம் 1996, தொழில்துறை வேலைவாய்ப்பு சட்டம் 1976 (நிலையாணை) உள்ளிட்ட சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் மாநிலத்துக்குள் இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டம் 1979, கிராஜூட்டி சட்டம் 1972, ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952, மற்றும் தொழிலக மாநில காப்பீடு சட்டம் 1948 உள்ளிட்ட சட்டங்களும் இதில் அடங்கும்.

தொழில் தொடங்கிய இரண்டாவது ஆண்டிலிருந்து மூன்றாவது ஆண்டுக்குள் பல்வேறு புகார்கள் மற்றும் மீறல்கள் குறித்து நம்பகமான சுய சான்றிதழ் எழுத்துபூர்வமாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அனுமதி வாங்க வேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சட்டத்தை மீறாமல் சுய ஒழுங்கை கடைபிடிக்க ஊக்கப்படுத்துவதாக இது இருக்கும் என்று குறிப் பிட்ட அமைச்சர், மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தொழிலாளர் சட்டத்தில் எழும் புகார்களுக்கு விலக்கு அளிக்கவில்லை இதற்கு வரம்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். தொழிலாளர் சட்டத்தில் உள்ள நடைமுறைகள் மற்றும் ஆய்வுகள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x