Published : 26 Mar 2016 09:54 AM
Last Updated : 26 Mar 2016 09:54 AM

9 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் விரைவில் நியமனம்

9 பொதுத்துறை வங்கிகளுக்கு இன்னும் தலைவர்கள் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த வங்கிகளுக்கு விரைவில் தலைவர்கள் நியமனம் செய்யப்படும் என்று மத்திய நிதிஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஆரம்பகட்ட பணியில் நிதி அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யூகோ வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் தலைவர் பதவி நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் தலைவர் பதவி இரண்டாக பிரிக்கப்பட்டது. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஒருவரே (சிஎம்டி) இருந்தனர். அதன் பிறகு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என இரண்டு பதவிகளாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, விஜயா வங்கி மற்றும் இந்தியன் வங்கிக்கு தலைவர் பதவிகள் நியமனம் செய்யப்பட்டன.

வங்கித்துறையை மேம்படுத்த சமீபத்தில் புதிய அமைப்பு பிபிபி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பொதுத்துறை வங்கி களின் தலைவர் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை முடிவு செய்யும். இதன் தலைவராக சிஏஜி யின் முன்னாள் தலைவர் வினோத் ராய் நியமனம் செய்யப்பட்டார்.

தலைவர்கள் நியமனம் மட்டு மல்லாமல், வாராக்கடன் பிரச் சினையை தீர்ப்பது, வங்கிகளை இணைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த அமைப்பு ஆலோசனை அளிக்கும்.

ஓபிசி வட்டி குறைப்பு

பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு கீழே உள்ள டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x