

நடப்பு நிதி ஆண்டில் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதுவரை 75,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் செய்த மொத்த முதலீடு 68,121 கோடி ரூபாய்தான்.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி பல நடவடிக்கைகளை எடுத்துவருவதால் பல சிறு நகரங்களில் இருந்தும் மியூச்சுவல் பண்ட்களில் புதிய முதலீட்டாளர்கள் வருகின்றனர்.
இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கமான (ஆம்பி) தகவல்படி 75,394 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் வந்த முதலீட்டில் 40 சதவீதத்துக்கும் மேல் சிறு நகரங்களில் இருந்து வந்திருக்கிறது.
பங்குச்சந்தையில் மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகமாக இருந்தாலும் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 17.7 சதவீதம் சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.