ஏர் ஏசியாவில் பங்குகளை அதிகரிக்க டாடா சன்ஸ் முடிவு

ஏர் ஏசியாவில் பங்குகளை அதிகரிக்க டாடா சன்ஸ் முடிவு
Updated on
1 min read

டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் ஏசியா நிறுவனத்தின் பங்குகளை 49 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. இது தொடர்பாக டாடா சன்ஸ் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஏர் ஏசியா நிறுவனத்தின் 41.06 சதவீத பங்குகளை வைத்திருந்த டாடா சன்ஸ் நிறுவனம் டெலிஸ்டா நிறுவனத்தின் அருண் பாட்டியா வசம் உள்ள 7.94 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் பங்குகளை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது.

டெலிஸ்டா நிறுவனம் வசம் உள்ள ஏர் ஏசியா நிறுவனத் தின் பங்குகளை கையகப்படுத் துவதற்காக இரண்டு நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

டெலிஸ்டா வசம் உள்ள 2 சதவீத பங்குகளில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் எஸ். ராமதுரை 0.5 சதவீத பங்குகளையும் இயக்குநர் ஆர்.வெங்கட்ராமன் 1.5 சதவீத பங்குகளையும் தனிப்பட்ட முதலீடாக வாங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏர் ஆசியா நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மார்ச் 14ல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான இரு நிறுவனங்களின் அலுவல் ரீதியான வேலைகள் முடிந்து இந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்று கூறியுள்ளது.

ஏர் ஏசியா நிறுவனம் 2014ல் செயல்பாடுகளை தொடங்கியது. மலேசியாவின் பெர்கட் நிறுவனம் 49 சதவீத முதலீடும், டாடா சன்ஸ் 30 சதவீதமும், பாட்டியாவின் 21 சதவீத முதலீட்டைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டது, ஆகஸ்ட் 2015ல் பாட்டியா தனது பங்குகளில் 11 சதவீதத்தை டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் ஏர் ஏசியாவில் தனது பங்குகளை 10 சதவீதமாக குறைத்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in