Last Updated : 02 Mar, 2016 04:51 PM

 

Published : 02 Mar 2016 04:51 PM
Last Updated : 02 Mar 2016 04:51 PM

கருப்பு பணத்தை வெள்ளையாக்க வாய்ப்பு அளிப்பது பொது மன்னிப்பு அல்ல: ஜேட்லி விளக்கம்

உள்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்க வாய்ப்பளிக்கும் திட்டம் ‘பொது மன்னிப்பு’ அல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வரும் 2016-17 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்நாட்டில் இதுவரை கணக்கில் காட்டப்படாமல் உள்ள கருப்புப் பணம் பற்றிய தகவலை தெரிவித்து அதை வெள்ளையாக்குவதற்கு 4 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. | அதன் விவரம்:>வரி உட்பட 45% அபராதம் செலுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக்க 4 மாதம் அவகாசம் வழங்க முடிவ

இந்நிலையில், தொழில் துறையினருடன் பட்ஜெட் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி கூறியதாவது:

"உள்நாட்டில் கணக்கில் காட்டாமல் உள்ள (கருப்பு பணம்) ரொக்கம் மற்றும் சொத்துகள் பற்றிய விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வரும் ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பொது மன்னிப்பு என சிலர் கருதுகின்றனர். அது தவறு.

இந்த திட்டத்தின்படி, தகவல் தெரிவிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பில் வழக்கம்போல 30 சதவீதம் வரி விதிக்கப்படும். அதனுடன், 7.5 சதவீதம் உபரி வரி, அபராதம் 7.5 சதவீதம் என மொத்தம் 45 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, இது பொது மன்னிப்பு திட்டம் அல்ல.

வழக்கமான வரியை மட்டும் வசூலிப்பதுதான் பொது மன்னிப்பு திட்டம். இதற்கு முன்பு கடந்த 1997-ம் ஆண்டு உள்நாட்டு கருப்புப் பண பொது மன்னிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு வரி மூலம் ரூ.10 ஆயிரம் கோடி கிடைத்தது" என்றார் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x