Published : 08 Oct 2021 01:43 PM
Last Updated : 08 Oct 2021 01:43 PM

காலாவதியான 15 ஆண்டுகள்  பழைய வாகனங்களை அழித்தால் ஊக்கத் தொகை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி

தனி நபர்கள் பயன்படுத்தி வரும் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்கும்போது அவர்களுக்கு 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் இந்த புதிய விதிமுறை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வாகனங்களை அழிக்கும்போது ஏற்படும் இழப்புக்காக ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது.

அதிகபட்ச பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவைக் கொண்டுள்ள பழைய, மாசுபடுத்தும் வாகனங்களை அழிப்பதற்கு வாகன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வாகன அழிப்புக்கொள்கை முன்வந்துள்ளது.

இதன்படி 2022 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இந்த சலுகைத் திட்டத்திற்க்கு இந்திய அரசிதழில் 05.10.2021 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் அறிவிக்கையை 720(இ) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருப்பின் 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

வணிகரீதியான போக்குவரத்து வாகனங்களாக இருப்பின் 15 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்தச் சலுகை போக்குவரத்து வாகனங்களாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரையும், தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x