Published : 07 Oct 2021 03:14 PM
Last Updated : 07 Oct 2021 03:14 PM

பழைய வாகனங்கள் மறுபதிவு; 8 மடங்கு கட்டணம் உயர்வு

புதுடெல்லி

பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த கட்டண அளவு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறி முகம் செய்யப்பட்டுள்ளன.

அந்த விதிகளின்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் இந்த புதிய விதிமுறை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* 15 ஆண்டுகள் பழமையான கார்களை மறுபதிவு செய்ய தற்போது ரூ.600 ஆக உள்ள கட்டணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8 மடங்கு அதிகம் ஆகும்.

* பழைய மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.300 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் இனி ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது.

* பழைய பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.1500 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் ரூ.12 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

* இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பழைய வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால் அன்றைய தினத்தில் இருந்து தினமும் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும்.

* இவை தனியார் வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு ரூ.300 வசூலிக்கப்படும்.

* வர்த்தக வாகனங்களாக இருந்தால் ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x