ஐஸ்கிரீம் பார்லர்களுக்கு 5% அல்ல 18% ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு விளக்கம்

ஐஸ்கிரீம் பார்லர்களுக்கு 5% அல்ல 18% ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

பார்லர் அல்லது அது போன்ற விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் ஐஸ்கிரீம்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

5-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடியது. கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதிஅமைச்சர்கள் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். கடைசியாக 2019-ம் ஆண்டு, டிசம்பர் 18-ம் தேதி நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடியது. அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின்பு நேரடியாக கூடி விவாதித்தது.

இந்தக் கூட்டத்தில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதனால் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் பார்லர்களுக்கு 5 சதவீத வரி தானா என்ற கேள்வி எழுந்துள்ளத. இந்தநிலையில் தொழில் நிறுவனங்கள் சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் பார்லர்கள் சேவை வழங்கும் நிறுவனமாக கருத முடியாது. அவர்கள் எந்த விதமான சமையலிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்ற ஒரு பொருளை வழங்குகின்றனர். சேவையை வழங்கவில்லை.

அதன்படி, பார்லர் அல்லது அது போன்ற விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் ஐஸ்கிரீம்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். உணவு டோர் டெலிவெரி செய்யும் சேவைகளுக்கு உணவகங்களை போல 5% ஜி.எஸ்.டி., பொருந்தும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in