Published : 19 Mar 2016 10:07 AM
Last Updated : 19 Mar 2016 10:07 AM

தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு ரூ.4.84 கோடி வழங்கியது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் இணையதளத்தில் உள்ள தவறைக் கண்டுபிடித்தவர் களுக்கு இதுவரை 4.84 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுவரை இதற்காக அதிகம் செலவிட்டது இந்த நிறுவனம்தான்.

`பக் பவுன்டி’ என்னும் திட்டத்தை ஃபேஸ்புக் நடத்தி வருகிறது. இதில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மென்பொருள் உள்ளிட்ட தவறுகளைக் கண்டு பிடிக்க பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல தவறுகளைக் கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 4.84 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்தியாவில் 14.2 கோடி வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனத்தின் `பக் பவுன்டி’ திட்டத்தில் 127 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டம் தொடங்கப் பட்டதில் இருந்து 800-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி யாளர்களுக்கு 43 லட்சம் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

இந்தியா, எகிப்து மற்றும் டிரினாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக தொகை செலவிடப் பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பயன்படுத்து பவர்களை பாதுகாப்பதற்காக தான் இந்த `பக் பவுன்டி’ திட்டம் கொண்டுவரப்பட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x