Published : 01 Mar 2016 08:40 AM
Last Updated : 01 Mar 2016 08:40 AM

மத்திய பட்ஜெட் 2016-17: அறிய வேண்டிய 60 அம்சங்கள்

* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.

* ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கான வரிச் சலுகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு.

* ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3000 நிவாரண விலக்கு. இதன்மூலம் ஒரு கோடி பேர் பயன் அடைவார்கள்.

* வாடகை வீட்டில் வசிப்போருக்கான வருமான வரிச் சலுகை உச்ச வரம்பு ரூ.24,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்வு.

* ரூ.35 லட்சத்துக்கு உட்பட்ட வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் வரிச்சலுகை.

* நான்கு பெருநகரங்களில் 30 சதுர மீட்டர், இதர நகரங்களில் 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.

* நுகர்வோர் விலை குறியீட்டு (சிபிஐ) பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.

* ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக அதிகரிப்பு.

* ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடிவு.

* அடுத்த 5 ஆண்டுகளில் விவ சாயிகளின் வருவாய் இரட்டிப் பாக்கப்படும்.

* நீண்டகால நீர்ப்பாசன திட்டத்துக்காக நபார்டு உதவியுடன் ரூ.20,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.86,500 கோடியில் 89 நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதன்மூலம் 80.6 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.

* ரூ.6,000 கோடியில் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மண் வள அட்டை திட்டத்தில் 2017-ம் ஆண்டுக்குள் 14 கோடி விவசாயிகளை இணைக்கத் திட்டம். மண் வளத்தைப் பேண ரூ.368 கோடி ஒதுக்கீடு.

* அடுத்த 3 ஆண்டுகளில் மண் வளம், விதை ஆய்வுக்காக 2 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும்.

* 55 சதவீத மானாவாரி விவ சாய நிலங்களில் இயற்கை வேளாண்மை சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* பருப்பு வகைகளின் உற்பத் தியை பெருக்க சலுகைகள் வழங்கப்படும்.

* உணவு உத்தரவாத திட்டத் தில் பருப்பு வகைகள் உற்பத்திக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் விளைபொருட் களை விற்க ஏப்ரல் 14-ம் தேதி டிஜிட்டல் வேளாண் சந்தை தொடங்கப்படும்.

* 2016-17-ம் நிதியாண்டில் 9 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு.

* புதிய பயிர் காப்பீடு திட்டத் துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* இந்திய உணவுக் கழகம் சார்பில் வேளாண் விளைபொருட்கள் ஆன்லைனில் கொள்முதல் செய்யப்படும்.

* கால்நடைத் துறை வளர்ச்சிக் காக ரூ.850 கோடியில் 4 புதிய திட்டங்கள் செயல்படுத்தப் படும்.

* வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.35,984 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வேலைவாய்ப்புத் உறுதித் திட்டத்தில் 5 லட்சம் குளங்கள் தூர்வாரப்படும், 10 லட்சம் இயற்கை உர மையங்கள் அமைக்கப்படும்.

* தூய்மை இந்தியா திட்டத்தில் நகரங்களின் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற புதிய கொள்கை வகுக்கப்படும்.

* பிரதம மந்திரி கிராம சதக் யோஜ்னா திட்டத்தில் கிராமங்களை மேம்படுத்த ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.

* வரும் 2021-ம் ஆண்டுக்குள் 65,000 கிராமங்களை பிரதான சாலையுடன் இணைக்க 2.23 லட்சம் கி.மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்படும்.

* இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதிய விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும்.

* வரும் 2018 மே 1-ம் தேதிக்குள் நாடு முழுவதும் 100 சதவீதம் மின் வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜ்னா திட்டத்துக்கு ரூ.8500 கோடி ஒதுக்கீடு.

* தூய்மை இந்தியா திட்டத் துக்காக ரூ.9000 கோடி ஒதுக்கீடு.

* திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்கும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் கிராமங்களில் 6 கோடி குடும்பங்களுக்கு கணினிசார் தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும். இத்திட்டத்தின் முழுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

* நிலஆவணங்களை கணினியில் பதிவு செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.87,765 கோடி ஒதுக்கீடு.

* ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் ஒரு கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.

* பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 75 லட்சம் சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

* ஏழைகளின் நலனுக்காக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி கிடைக்கும் வகையில் சுகாதார பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாழும் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் வழங்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

* பிரதமரின் ஜன ஆஸாதி யோஜ்னா திட்டத்தில் 2016-17-ல் நாடு முழுவதும் 3 ஆயிரம் குறைந்தவிலை மருந்து கடைகள் திறக்கப்படும்.

* சிறுநீரக நோயாளிகளுக்காக தேசிய டயாலசிஸ் திட்டம் செயல் படுத்தப்படும். அதன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் டயாலசிஸ் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.

* தொடங்கிடு இந்தியா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2.5 லட்சம் பேர் பயன் பெறுவர்.

* நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 62 நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங் கப்படும்.

* 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

* உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.1000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

* பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றி தழ்கள் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து பாதுகாக்க டிஜிட்டல் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் உயர்படிப்பு, வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. இணைய தளத்திலேயே சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

* நாடு முழுவதும் ரூ.1700 கோடி செலவில் 1500 திறன்சார் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

* இளம் தொழிலதிபர்களை உருவாக்க 2200 கல்லூரிகள், 300 பள்ளிகள், 500 அரசு ஐடிஐ, 50 தொழிற்பயிற்சி மையங்களில் ஆன்லைன் தொழில் படிப்புகள் தொடங்கப்படும்.

* புதிய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தா தொகையை முதல் 3 ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும்.

* சாலை, நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக ரூ.97,000 கோடி ஒதுக்கீடு.

* சாலை, ரயில் போக்குவரத்து திட்டத்துக்காக மொத்தம் ரூ.2,21,246 கோடி ஒதுக்கீடு.

* தேசிய நீர்வழி போக்குவரத்து திட்டத்துக்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு.

* மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களை இணைத்து தேசிய அளவில் வேலைவாய்ப்பு சேவை மையம் உருவாக்கப்படும்.

* பெரிய ஷாப்பிங் மால்களை போன்று சிறிய கடைகளும் வாரத்தின் 7 நாட்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்படும்.

* விமான சேவையை ஊக்குவிக்க நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத 160 விமான நிலையங்கள் தலா ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்.

* பொதுத்துறை வங்கிகள் மேம்பாட்டுக்காக ரூ.25,000 கோடி ஒதுக்கீடு.

* முத்ரா வங்கிக் கடன் திட்டத்தில் இதுவரை 2.5 கோடி பேருக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் ரூ.1.8 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும்.

* உட்கட்டுமானத் துறைக்கு மொத்தம் ரூ.2.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் நூற்றாண்டு, குரு கோவிந்த் சிங்கின் 350-வது ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாட ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* 2016-17 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.5% ஆக இருக்கும் என கணிப்பு.

* மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

* ராணுவ பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

* புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x