Last Updated : 27 Mar, 2016 02:38 PM

 

Published : 27 Mar 2016 02:38 PM
Last Updated : 27 Mar 2016 02:38 PM

அலுமினியத்தின் தேவை 2 கோடி டன்னாக உயரும்: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை

இந்தியாவில் அலுமினியத்தின் தேவை தற்போது 20 லட்சம் டன்னாக இருக்கிறது. இது 2 கோடி டன் அளவுக்கு உயரும் என்று வேதாந்தா குழுமத்தின் தலை வர் அனில் அகர்வால் தெரி வித்தார்.

தற்போது இந்தியாவில் 15 லட்சம் டன் அலுமினியம் உற் பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 20 லட்சன் டன் தேவை இருக் கிறது. இது 2 கோடி டன்னாக உயரும். கட்டுமானம், விமானப் போக்குவரத்து, ஆட்டோ மொபைல் என அனைத்து இடங்க ளிலும் அலுமினியத்துக்கான தேவை உயரும் என்று கூறிய அனில் அகர்வால் எவ்வளவு காலத் தில் தேவை உயரும் என்பதை கூறவில்லை.

புதுடெல்லியில் நடந்த இந்திய தொழிலக கூட்டமைப்பின் விழா வில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

இந்த துறையில் சிறு மற்றும் குறு நிறுவனம் தொடங்க வேண் டும் என்றல் 25 கோடி முதல் 500 கோடியில் தொடங்க முடியும். வங்கிகள் சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் தருவ தில்லை என்பது தவறான எண்ணம். வங்கிகள் இதுபோன்ற நிறுவ னங்களுக்கு கடன் தர தயராக இருக்கிறார்கள்.

இந்தியாவில் எண்ணெய் வளம் இல்லை என்பது தவறான புரிதல் ஆகும். இந்தியாவில் ஏராளமான எண்ணெய் வளம் இருக்கிறது. நாங்கள் கெய்ர்ன் இந்தியாவை வாங்கும்போது இருந்தை விட இப்போது சூழ் நிலை மேம்பட்டிருக்கிறது. அரசு ஊக்கம் அளிக்கிறது. முன்பை விட உற்பத்தியை நான்கு மடங்கு உயர்த்த முடியும்.

மத்திய அரசு எண்ணெய் வயல் களை தொழில் முனைவோர்க ளிடம் கொடுக்க வேண்டும். அவர்களிடமிருந்து வருவாய் பகிர்வு அடிப்படையில் செயல்பட வேண்டும் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 50 சத வீததை கெய்ர்ன் இந்தியா உற் பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு இருக்கிறது.

கடந்த 30 நாட்களில் வேதாந்தா நிறுவனம் லண்டன் சந்தையில் இருந்து லட்சம் கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது. இந்த தொகையை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இங்கு எண்ணெய் மற்றும் எரி வாயு, அலுமினியம், தாமிரம், இரும்பு மற்றூம் துத்தநாகம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் 33,000 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு வரி, ராயல்டியாக செலுத் துகிறோம். இதுவரை 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம் என்று அனில் அகர்வால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x