இவரைத் தெரியுமா?- ராகுல் பஜாஜ்

இவரைத் தெரியுமா?- ராகுல் பஜாஜ்
Updated on
1 min read

பஜாஜ் குழும நிறுவனங்களின் தலைவர். இந்தியா தவிர வெளிநாடு களிலும் இருசக்கர வாகனம், மின்னணு சாதனங்கள், மின் விளக்குகள், ஆயுள் காப்பீடு, நிதிச் சேவை என பல்வேறு தொழில்களை தொடங்கி வெற்றி பெற்றவர்.

தொழில் துறை பங்களிப்பிற்காக சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

ரூர்கி ஐஐடி உள்பட ஏழு பல்கலைக் கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், வாகன உற்பத்தி மற்றும் துணை நிறுவனங்கள் மேம்பாட்டு அமைப்பு என பல்வேறு தொழில்துறை அமைப்புகளில் தலைவர் பொறுப்பில் இருந்தவர். இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், டெல்லி ஐஐடி உள்ளிட்டவற்றில் தலைவராகவும் இருந்தவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் முடித்தவர். ஹார்வார்டு பிசினஸ் பள்ளியில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in