

பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் இ-மெயில் முகவரியை வைத்து 80,000 டாலர் திருட முயற்சி நடந்திருக்கிறது. இது குறித்து காவல் நிலையத்தில் பிளிப்கார்ட் புகார் தெரிவித்திருக்கிறது. அதன் புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு தலை மைச் செயல் அதிகாரி பின்னி பன்சா லின் இ-மெயில் முகவரி ஊடுருவப் பட்டு, அதிலிருந்து தலைமை நிதி அதிகாரி சஞ்சய் பெவெஜாவுக்கு மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மெயிலில் 80,000 டாலர் பணத் தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தது. இது போல மெயில் வருவது புதுமையாக இருந்ததால் தலைமை நிதி அதிகாரி பின்னி பன்சாலிடம் நேரடியாக கேட்கவே அப்படி மெயில் ஏதும் அனுப்பவில்லை என்று கூறியிருக் கிறார். இது குறித்து காவல் நிலையத்தில் பிளிப்கார்ட் புகார் அளித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள சர்வரில் இருந்து ஹாங்காங் மற்றும் கனடாவில் இருந்து அவரது மெயில் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.