Published : 12 Mar 2016 10:17 AM
Last Updated : 12 Mar 2016 10:17 AM

இவரைத் தெரியுமா?- ஸ்டீபன் பெர்ன்ஸ்

உதிரி பாக உற்பத்தியில் முன்னணியில் உள்ள பாஷ் இந்தியா நிறுவனத்தின் தலைவர். 2013-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2006 முதல் 2013-ம் ஆண்டு வரை கேசோலைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

தற்போது பாஷ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார். இதே நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள ஆச்சென் தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

1994-ம் ஆண்டு முதல் 1996 வரை டீசல் சிஸ்டம் நிறுவனத்தில் இன்ஜினியரிங் துறைக்கு தலைவராக இருந்தவர்.

உதிரி பாகங்கள் தயாரிப்பில் 27 வருட அனுபவம் கொண்டவர். நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x