Last Updated : 24 Mar, 2016 10:02 AM

 

Published : 24 Mar 2016 10:02 AM
Last Updated : 24 Mar 2016 10:02 AM

மின்னணு உற்பத்தித் துறையில் ரூ.1.28 லட்சம் கோடி முதலீடு: அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல்

மின்னணு பொருட்கள் உற்பத்தி துறையில் ரூ.1.28 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் மிகப் பெரிய மின்னணு சந்தையாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டுக்கு முன்னர் மின்னணு உற்பத்தி துறையில் 11,700 கோடி ரூபாய் அளவுக்குத் தான் முதலீடு செய்யப்பட்டிருந்தது. எங்களது அரசு அமைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி துறையில் ரூ.1,28,000 கோடிக்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் மின்னணு உற்பத்தி கேந்திரம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்தியா தொழில்நுட்பங்க ளோடு வேகமாக ஐக்கியமாகி கொள்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இணையம் பயன்படுத்தும் வசதியை பெறுவார்கள் என தான் நம்புவதாகக் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 20 கோடி முதல் 30 கோடியாகத்தான் இருந்தது. நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு இணைய வசதி 40 கோடி மக்களுக்கு கிடைத்துள்ளது. இணைய வசதி அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 40 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற இலக்கை அடைந்தது ஆச்சர்யமளிப்பதாக இருந்தது. 2017க்குள் இந்த எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிக்கும் என நினைப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், ஆனால் இந்த இலக்கு 2016 ஆம் ஆண்டுக் குள் நிறைவேற்றப்பட வாய்ப்புள் ளதாகவும் கூறினார்.

மத்திய அரசின் இலக்கு மக்களை டிஜிட்டல் தொழில் நுட்பங்களுக்குள் இணைப் பது மட்டுமல்ல, தொழில்நுட் பத்தை போதிப்பதும், அறிவு சார்ந்த இந்தியாவை உருவாக்கு வதும்தான் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

100 கோடி செல்போன்கள்

இந்தியாவில் இன்று 100 கோடிக்கும் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன, 99 கோடி மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடி மானியத்தை அளித்ததன் மூலம் மத்திய அரசின் செலவுகளில் ரூ.50,000 கோடி சேமிக்கப் பட்டுள்ளது. சிறு நகரங் களுக்கும் ஆன்லைன் சந்தை சென்றடைந்துள்ளது என்றார்.

2.5 லட்சம் கிராம பஞ்சாயத்து களை ஆப்டிக்கல் பைபர் கேபிள் தொழில்நுட்பத்துடன் இணைப்பதை மத்திய அரசு லட்சிய திட்டமாக வைத்துள்ளது. இணைக்கப்பட வேண்டிய 1.30 லட்சம் கிலோ மீட்டர்களில் தற்போதுவரை 1.10 லட்சம் கிலோ மீட்டர்களை இணைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை சேவைகளை கொண்டு செல்ல முடியும்.

மேலும் ஆன்லைன் பிசினஸ், ஆன்லைன் கல்வி, ஆன்லைன் ஹெல்த் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளை கிராமப்புரங்களுக்கு கொண்டு செல்ல முடியும். சிறு நகரங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமான பிபிஓ சென்டர்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், 78 நிறுவனங்கள் நாடு முழுவதும் 190 இடங்களில் பிபிஓ தொடங்க விருப்பமாக உள்ளன என்றார். இதன் மூலம் 1,25,000 வேலைகள் உருவாகும் என்றார்.

இந்தியாவில் பிபிஓ மற்றும் ஐடி தொடர்பான தொழில்களை மேம்படுத்த ‘இந்தியா பிபிஓ மேம்பாட்டு’ திட்டத்துக்கு ( IBPS) ரூ.493 கோடியை, மார்ச் 2017 ல் முடிவடையும் 12வது ஐந்தாண்டு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x