

கடந்த ஒன்பது வருடங்களாக 2,700 நிறுவனங்கள் விவசாயத்தின் மூலம் ரூ. 1 கோடிக்கும் மேல் வருமானம் பெற்றதாக தெரிவித்து வந்துள்ளன. இதில் சில நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு விசாரணையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
2011-12 மற்றும் 2013-14 ஆண்டு களில் விவசாயத்தின் மூலம் ரூ. 1 கோடி வருமானம் வருகிறது என்று வருமானம் வரி தாக்கல் செய்யும் நிறுவனங்களை சரிபார்க்க வரு மான வரித்துறை உத்தரவிட்டிருந் தது. முன்னதாக பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சில நிறுவனங்கள் விவசாயத்தின் மூலம் ரூ. 1 கோடி வருகிறது என்று வருமான வரி தாக்கல் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
விவசாயத்தின் மூலம் வருகின்ற வருமானத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2007-08 ஆண்டு முதல் 2015-16 வரை மொத்தம் 2,746 நிறுவனங்கள் விவசாயத்தின் மூலம் தங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் 1 கோடி ரூபாய் என்று தாக்கல் செய்துள்ளன. வரி விலக்குக்காக இதை கூறியுள்ளார்களா என்று வருமான வரித்துறை சந்தேகப்படுகிறது.
இது தொடர்பான அறிக்கை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணை யத்திற்கு மார்ச் 20-ம் தேதிக்குள் அனுப்பப்படும் அதேபோல் பாட்னா உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.