

காப்பீட்டுத் துறையில் அதிக அந் நிய நிறுவன முதலீட்டை (எப்டிஐ) பெறுவதற்காக விதிகளில் மாற் றம் செய்யப்பட்டுள்ளது. தற் போது இந்தத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 26 சதவீத முதலீட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் 26 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை யிலான முதலீடுக்கு மத்திய அரசின் (வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் - எப்ஐபிபி) அனுமதி தேவை.
இப்போது இந்த விதியில் மாற் றம் கொண்டுவந்து 49 சதவீ தம் வரையில் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று விதி யில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது. காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி யோடு 49 சதவீத வெளிநாடு முதலீடு வரலாம் என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையி லான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் உயர்ந்து 2,944 கோடி டாலராக இருக்கிறது.