ஐடி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்வு

ஐடி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்வு
Updated on
1 min read

ஐடி நிறுவன பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஐடி பங்கு களில் முதலீடு உயர்ந்திருக்கிறது. ஜனவரி இறுதியில் 43,115 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட் டுள்ளது. கடந்த வருடம் ஜனவரியில் 35,463 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதால் ஐடி பங்குகளில் செய்யப்படும் முதலீடு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஐடி துறைக்கு வரும் வருமானத்தில் 85 சதவீத வருமானம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்தது. இப்போது ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலைமையில் உள்ளது. பங்குச் சந்தையில் செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் ஐடி துறையின் பங்கு 10.55 சதவீதமாகும். கடந்த டிசம்பரில் 41,998 கோடி ரூபாய் அளவுக்கு ஐடி பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

மியூச்சுவல் பண்ட் மேலாளர்கள் அதிகம் விரும்பும் துறையில் ஐடி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

வங்கித்துறையில் முதலீடு

வங்கித்துறை பங்குகளில் அதிக முதலீடு இருக்கிறது. வங்கித்துறையில் 78,644 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து பார்மா துறையில் 33,785 கோடி ரூபாயும், ஆட்டோ துறையில் 26,653 கோடி ரூபாயும், நிதித்துறையில் 23,131 கோடி ரூபாயும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in