

ஸ்மார்ட்போன் சந்தையில் அமெ ரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிகை 22 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் சாம்சங் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 சதவீத அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் போன் சென்றுள்ளது. அதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தைக்கு பெரிய வாய்ப்புகள் உள்ளதாக கவுன்டர்பாயின்ட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித் துள்ளது.
கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஸ்மார்ட்போன் சந்தை 15 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வருடத் தில் மட்டும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் 20 லட்சம் விற்பனை யாகியுள்ளன.
மொத்த சந்தையில் சாம்சங் 28 சதவீதத்தையும், மைக்ரோமேக்ஸ் 14.3 சதவீதம், லெனோவா 11.4 சதவீதம், இன்டெக்ஸ் 9.6%, லாவா 6.8 சதவீத சந்தையை வைத்துள்ளன. ஆப்பிள் உள்ளிட்ட இதர நிறுவனங்கள் 29.3 சதவீத சந்தையை வைத்துள்ளன.
ஆனால் வருமான அடிப்படை யிலான சந்தையை பார்க்கும் போது ஆப்பிள் மூன்றாவது இடத் தில் உள்ளது. அதாவது ஸ்மார்ட் போனுக்கு இந்திய மக்கள் செய்யும் செலவில் ஆப்பிளுக்கு 11 சதவீதம் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.