Published : 03 Feb 2016 10:29 AM
Last Updated : 03 Feb 2016 10:29 AM

இவரைத் தெரியுமா?- டென்னிஸ் எம் நாலி

சர்வதேச கன்சல்ட்டிங் நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனத்தின் தலைவர். 2009-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

1974-ம் ஆண்டு பிடபிள்யூசி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். 1985-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.

உலக பொருளாதார அமைப்பு மற்றும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் முக்கிய உரைகளை நிகழ்த்தியுள்ளார்.

பிடபிள்யூசி நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் குழுவிற்கு தலைவராக இருந்து வருகிறார். மேலும் இதே நிறுவனத்தில் தணிக்கை மற்றும் தொழில் ஆலோசனை சேவைக்கும் தலைவராக பணியாற்றியவர்.

அமெரிக்க சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருந்தவர். மேலும் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர்.

கொலாம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டபடிப்பை முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x