

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா வங்கியின் டிசம்பர் காலாண்டு வருமானம் ரூ.11,726 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ.11,808 கோடியாக இருந்தது. வட்டி மூலமான வருமானம் ரூ.2,705 கோடியாகவும், பிற இனங்கள் மூலமான வருமானம் 2.07 சதவீதம் உயரந்து ரூ. 1,113 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
வங்கியின் நிகர செலவு 5.85 சதவீதம் அதிகரித்து ரூ.10,023 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு செலவு 3.76 சதவீதம் அதிகரித்து ரூ.2,114 கோடியைத் தொட்டுள்ளது.
வங்கியின் நிகர வாராக் கடன் ரூ.38,934 கோடி. மூன்றாம் காலாண்டில் ஏற்பட்ட கடன் அளவு ரூ.15,603 கோடி. மூன்றாம் காலாண்டில் வாராக ்கடன் அளவு 4.89 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 2.75 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்கு இந்த காலாண்டில் ஒதுக்கிய தொகை ரூ. 6,474 கோடி. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஒதுக்கிய தொகை ரூ.1,148 கோடியாகும். வாராக் கடனுக்கு ஒதுக்கிய தொகை அதிகரித்ததால் வங்கியின் நிகர நஷ்டம் ரூ.3,342 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ரூ.333 கோடி லாபம் ஈட்டியிருந்தது.