Last Updated : 23 Feb, 2016 10:37 AM

 

Published : 23 Feb 2016 10:37 AM
Last Updated : 23 Feb 2016 10:37 AM

பிப்-29 ல் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை வங்கிகள் வரும் 29 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளன. தனலட்சுமி வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் பி.வி.மோகனன் வேலையிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத் துள்ளது. 29 ஆம் தேதி 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வேலை நிறுத்த போரட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (ஏஐபிஓசி) பொதுச்செயலாளர் ஹவிந்தர் சிங் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனலட்சுமி வங்கியின் ஊழியர்கள் சங்க கேரள மாநில தலைவரான பி.வி.மோகனனை கடுமையான குற்றச்சாட்டின்கீழ் வங்கி வேலை நீக்கம் செய்துள்ளது. இவர் அனைந்திந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பிலும் உள்ளார். இதனை கண்டித்து பிப்ரவரி 29 ஆம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது என்று குறிப்பிட்டார்.

தனலட்சுமி வங்கி கேரளாவுக்கு வெளியே தலைமையிடத்தைக் கொண்டு இயங்கிவரும் வங்கியாகும். மிகப் பழமையான தனியார் வங்கி இது. இந்த விவகாரத்தை சமரசமாக தீர்க்க இதுவரை வங்கி நிர்வாகத்துடன் மேற்கொண்ட முயற்சிகள் தோல் வியடைந்துள்ளன. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டமைப்பை சேர்ந்த 2.75 லட்சம் வங்கி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கி களும் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர் சேவை பாதிக்காமல் இருக்க ஆலோச னைகள் செய்து வருகின்றன. இது தொடர்பாக செய்தி வெளி யிட்டுள்ள பேங்க் ஆப் பரோடா, வங்கிச் சேவைகள் தடங்கல் இல்லாத வகையில் இயங்க அவசியமான நடவடிக்கை மேற் கொள்ள அனைத்து கிளைகளுக் கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

அனைத்திந்திய வங்கி ஊழியர் களின் கூட்டமைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தம் என்பது வங்கி அளவிலான விவகாரம் கிடையாது. இது தொழில்துறை சார்ந்த விவகாரமாக பார்க்க வேண்டும் என்று கனரா வங்கி கூறியுள்ளது. இந்த வங்கி ஊழியர்கள் சங்கமும் அனைத்திந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x