புனிதா குமார் சின்ஹா - இவரைத் தெரியுமா?

புனிதா குமார் சின்ஹா - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ பிளாக்ஸ்டோன் ஆசியா ஆலோசனை நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர்.

$ 6 வெவ்வேறு தொழில்களைக் கொண்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

$ சொத்து நிர்வாகத்தில் சர்வதேச அளவில் 22 ஆண்டு அனுபவம் மிக்கவர்.

$ இந்நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு சிஐபிசி வேர்ல்ட் மார்க்கெட் நிறுவனத்தில் துணை நிர்வாக மேலாளராகப் பணியாற்றினார்.

$ உலக வங்கியின் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் சுயேச்சை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

$ டெல்லி ஐஐடி-யில் ரசாயன பொறியியல் பட்டம், வார்டன் பென்சில்வேனியா கல்வி மையத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

$ 2003-ம் ஆண்டு சிறந்த பெண் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். வளர்ச்சியைடந்த நாடுகளின் பொருளாதாரத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in